பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான தோவாளை பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் மலர் வணிகச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தியாகும் பூக்களும் தோவாளை மலர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மார்க்கெட் நிலவரம் என்ன..?
இங்கிருந்து பூக்கள் தினமும், திருவனந்தபுரம் மற்றும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தோவாளை மலர் சந்தையில் நேற்றைய தினம் மல்லிப்பூ கிலோ ரூ.400, பிச்சிப்பூ கிலோ ரூ.500, முல்லைப்பூ கிலோ ரூ.600, சம்பங்கி பூ கிலோ ரூ. 150க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பங்குனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சித்திரை திருவிழாவுக்கு செல்லும் ஆண்டாள் சூடிய மாலை..!!
பிச்சிப்பூ கிலோ ரூ.1,250, மல்லிகைப்பூ கிலோ ரூ.600, அரளிப்பூ கிலோ ரூ.300, வாடாமல்லி கிலோ ரூ.60, கேந்தி பூ கிலோ ரூ.100, சம்பங்கி பூ கிலோ ரூ.200, முல்லைப் பூ கிலோ ரூ.1000, ரோஸ் கிலோ ரூ.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.200க்கும், துளசி கிலோ ரூ.40, தாமரைப் பூ ஒன்று ரூ.5, மரிக்கொழுந்து கிலோ ரூ.100, செவ்வந்தி கிலோ ரூ.300க்கும் விற்கப்படுகிறது.
பூக்கள் விலை உயர்வு குறித்து உள்ளூர் வியாபாரி தெரிவிக்கையில், “இது சீசன் காலம் என்பதால் சுப முகூர்த்த நாட்களைக் காட்டிலும் மற்ற நாட்களில் பூக்களின் விலை குறைவாகவே உள்ளது.
இருப்பினும் சுப முகூர்த்த நாட்கள், கோவில் கொடை விழா நாட்கள் போன்ற விசேஷ தினங்களின் பூக்களின் விலை தேவையைப் பொருத்து பன்மடங்கு அதிகரிக்கிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…