Last Updated:
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கால அவகாசம் ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டது.
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பயிர் காப்பீடு செய்வதற்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி இதுகுறித்த செய்தியை ஒளிபரப்பியது. இந்தச் செய்தியின் எதிரொலியாக, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
August 01, 2025 9:48 AM IST