Last Updated:
ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது கடன் வழங்குனர்கள் உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை சரி பார்ப்பார்கள்.
பொதுவாக 750க்கும் அதிகமான சிபில் ஸ்கோர் வைத்திருப்பது சிறந்தது. இதன் மூலமாக குறைவான வட்டி விகிதங்களில் உங்களுக்கு கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதே சமயத்தில் பெரும்பாலான சூழ்நிலைகளில் இது உங்களுக்கு கடன் வழங்குவதில் குறைவான ரிஸ்க் இருப்பதை வெளிப்படுத்துகிறது. ஒருவேளை முன்னதாக நீங்கள் வாங்கிய கடன்களின் நிலுவைத் தொகைகள், தாமதமாகச் செலுத்திய EMIகள் அல்லது கிரெடிட் கார்டை அதிகமாகப் பயன்படுத்தி இருந்ததன் காரணமாக, உங்களுடைய சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கவலைப்படாதீர்கள்.
இதனை உங்களால் நிச்சயமாகச் சரி செய்ய முடியும். அடுத்த 6 மாதத்திற்குள் வீட்டுக் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்குவதற்கு யோசித்து வருகிறீர்கள் என்றால், உங்களுடைய சிபில் ஸ்கோரை அதிகப்படுத்துவது மிகவும் அவசியம். எனவே சிபில் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான சில எளிமையான வழிகளை இப்போது பார்க்கலாம்.
உங்களுடைய பேமெண்ட் வரலாறு என்பது சிபில் ஸ்கோரில் கிட்டத்தட்ட 35 சதவீதம் என்ற பெரிய அளவிலான பங்கை கொண்டுள்ளது. எனவே ஒரு முறை நீங்கள் பேமெண்ட் செலுத்த தவறினால் கூட அது உங்களுடைய சிபில் ஸ்கோரை பாதிக்கலாம். ஆகையால் ஆட்டோ டெபிட் ஆப்ஷனை எனேபிள் செய்து சரியான தேதியில் மாதத் தவணைகள் மற்றும் கிரெடிட் கார்டு பில்லை செலுத்துவதை உறுதி செய்யுங்கள்.
அதிக கடன் பயனீட்டு விகிதம், உதாரணமாக உங்களுடைய கிரெடிட் கார்டில் வழங்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் லிமிட்டில் நீங்கள் 70,000 ரூபாய் செலவு செய்யும் பட்சத்தில், நீங்கள் முழுக்க முழுக்க கடனைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்றும், அதனால் உங்களுடைய சிபில் ஸ்கோர் குறையலாம். எனவே முடிந்த அளவு உங்களுடைய கார்டு மீதான மொத்த லிமிட்டில் 30 சதவீதத்திற்கும் குறைவாகப் பயன்படுத்துங்கள். அவ்வாறு செய்ய முடியாத போது, வங்கியில் கோரிக்கை விடுத்து உங்களுடைய உச்ச வரம்பை அதிகரிக்குமாறு நீங்கள் கேட்கலாம். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.

ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது கடன் வழங்குனர்கள் உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை சரி பார்ப்பார்கள். இது ஹார்ட் என்கொயரியை உருவாக்கும். ஒரு குறுகிய காலகட்டத்தில் அதிகப்படியான ஹார்ட் என்கொயரிகள் செய்யப்பட்டிருப்பது உங்களுடைய சிபில் ஸ்கோரை குறைத்து, நீங்கள் அதிகமாகக் கடன் பெறுபவர் என்பதை வெளிப்படுத்துகிறது. ஒரு சிலர் ஒவ்வொரு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக பல்வேறு கடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதுண்டு. அவ்வாறு செய்யாமல் ஆன்லைனில் ஒப்பிட்டுப் பார்த்து கவனமாக விண்ணப்பிப்பது அவசியம்.
உங்களுடைய சிபில் ரிப்போர்ட்டில் பிழைகள் இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஏற்கனவே மூடிய ஒரு லோன் அக்கவுண்ட் ஆக்டிவாகக் காட்டப்படலாம் அல்லது நீங்கள் சரியான முறையில் செலுத்தி இருந்தாலும் ஒரு சில பேமெண்ட்கள் தாமதமாகச் செலுத்தியதாகக் காட்டப்படலாம். இந்த மாதிரியான பிரச்சனைகள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை குறைக்கக் கூடும். எனவே இன்டர்நெட்டில் கிடைக்கும் இலவச கிரெடிட் ரிப்போர்ட்டைப் பெற்று அதனை கவனமாகச் சரிபார்க்கவும். ஒருவேளை அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் ஒரு CIBIL உடன் ஒரு புகார் எழுப்பி அதனைச் சரி செய்யவும். இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு 30 முதல் 45 நாட்கள் ஆகும். எனவே ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்வதை உறுதி செய்யுங்கள்.
நீளமான கிரெடிட் வரலாறு என்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அமைப்பதற்கு மிகவும் உதவும். எனவே நீங்கள் 10 வருடங்களாகப் பயன்படுத்தாமல் இருந்தால் கூட முடிந்தவரை கிரெடிட் கார்டு அக்கவுண்டுகளை மூடாமல் வைத்திருப்பது நல்லது. அவ்வாறு அதனை நீங்கள் மூடும் போது அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை குறைக்கலாம்.
August 01, 2025 12:15 PM IST