பயணத் தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் No-Boarding Directives என்ற புதிய செயல்முறை வழிகாட்டுதலை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அமல்படுத்தவுள்ளது.
அதன்படி, சிங்கப்பூருக்குள் நுழையும் அதிக ஆபத்துள்ள பயணிகளுக்கு தடை விதிக்குமாறு அது போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், குடிநுழைவு அல்லது சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் தனி நபர்கள் சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளை அடைவதை தடுக்க இது உதவும் என்றும் ICA தெரிவித்துள்ளது.
இது எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் பகிரப்படும்.
தானியங்கி பயணிகள் அனுமதி அமைப்பு
மேலும், அடுத்த ஆண்டு இறுதியில் துவாஸ் சோதனைச் சாவடியில் தானியங்கி பயணிகள் அனுமதி அமைப்பை (APCS) அறிமுகப்படுத்த ICA திட்டமிட்டுள்ளது.
APCS மூலம் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கோ வாகனங்களில் பயணிப்பவர்கள் இலகுவாக வாகனத்தில் இருந்துகொண்டே தானியங்கி சுய-குடிநுழைவு அனுமதியை பெறலாம்.
இந்த APCS அமைப்பு மூலம், 24/7 என்ற அடிப்படையில் அதிக அளவிலான குடிநுழைவு சோதனையை சிரமமின்றி செயல்படுத்த முடியும்.
மேலும் இதற்காக அதிக அளவில் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டிய தேவையும் இருக்காது.
சிங்கப்பூரில் வேலை இருக்கிறதா? – இழப்புகளை தவிர்க்க கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய 3 அம்சங்கள் – மனிதவள துணை அமைச்சர் அறிவிப்பு
சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் இடமாற்றம்!
Photo: AFP