Last Updated:
பர்சனல் லோன் வாங்கும் போது டிஜிட்டல் KYC அவசியம். இது செயல்முறையை விரைவாக்கி, உடனடி அங்கீகாரம், பாதுகாப்பு, சட்டபூர்வம், மற்றும் கிரெடிட் வரலாற்றை சரியாக அமைக்க உதவுகிறது.
பர்சனல் லோன் என்பது நம்முடைய பல்வேறு விதமான பண பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வாக அமைகிறது. ஆனால் ஒரு பர்சனல் லோனை வாங்கும் போது டிஜிட்டல் KYC என்பது அவசியமானதாக கருதப்படுகிறது. அது ஏன் என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம். இதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
லோன் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது:
டிஜிட்டல் KYC இன் கீழ் உங்களுடைய ஆவணங்களை நேரடியாக தாளில் சமர்ப்பிக்க தேவையில்லை என்பதால் உங்களது ஆதார் மற்றும் PAN கார்டு போன்றவற்றை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இது பெரும்பாலும் OTP மூலமாக செய்யப்படுகிறது. இதனால் உங்களுடைய அடையாளத்தை உடனடியாக சரிபார்த்து, கடன் வழங்குனர் உங்களுக்கான கடனை விரைவாக அங்கீகரிப்பதற்கு இது உதவுகிறது. உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதற்கு நீங்கள் பல நாட்கள் காத்திருக்க தேவையில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து செயல்முறைகளும் நிறைவு செய்யப்படும்.
உடனடி கடன் அங்கீகரிப்பு:
பெரும்பாலான கடன் வழங்கும் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் இப்போது டிஜிட்டல் KYC மூலமாக உடனடியாக கடனை அங்கீகரிக்கின்றனர். உங்களுடைய வங்கி விவரங்கள் மற்றும் அடையாளம் ஆகியவை ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டால் ஒரு சில வினாடிகளிலேயே கடன் தொகையானது உங்களது அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் உங்களுடைய KYC-ஐ நீங்கள் சரியாக இணைக்காவிட்டாலோ அல்லது அது முழுமையாக இல்லாமல் இருந்தாலோ உங்களுடைய விண்ணப்பம் ரிஜெக்ட் செய்யப்படலாம் அல்லது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படலாம்.
பாதுகாப்பாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் வைக்கப்படுகிறது:
டிஜிட்டல் KYC மூலமாக லைவ் செல்ஃபிக்கள் மற்றும் ஆன்லைன் அடையாள சரிபார்ப்பு செய்யப்பட்டு நீங்கள் தான் அந்த கடனை வாங்குகிறீர்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலமாக போலி ஆவணங்கள் வழங்கப்படுவதற்கான அபாயங்கள் குறைகிறது. மேலும் இதனால் கடன் வழங்குனர்கள் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனர்.
அனைவரும் கடன் பெறுவதற்கு உதவுகிறது:
சேலரி ஸ்லிப் அல்லது அதிக பேங்க் ஸ்டேட்மெண்டுகள் இல்லாத மாணவர்கள், ஃப்ரீ லான்சர்கள் அல்லது இல்லத்தரசிகளும் இந்த டிஜிட்டல் KYC செயல்முறையை நிறைவு செய்துவிட்டால் ஆன்லைனில் எளிதாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு சில கடன் வழங்குனர்கள் இதனை பயன்படுத்தி சிறிய அளவிலான கடன்களை வழங்கி வருகின்றனர்.
கிரெடிட் வரலாற்றை சரியான முறையில் அமைக்க உதவுகிறது:
உங்களுடைய KYC விவரங்கள் சரியாக இருந்தால் உங்களது கடனானது எந்த ஒரு முரண்பாடுகளும் இல்லாமல் கிரெடிட் பியூரியாக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அமைப்பதற்கு இது மிகவும் அவசியம். ஒருவேளை உங்களுடைய விபரங்கள் தவறாக இருந்தாலோ அல்லது நிறைவடையாமல் இருந்தாலோ உங்களுடைய கடன் கிரெடிட் பியூரியாக்களுக்கு சரியாக தெரிவிக்கப்படாது. இதனால் எதிர்காலத்தில் நீங்கள் கடன் வாங்குவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
எதிர்கால லோன்களை எளிமையாக்குகிறது:
டிஜிட்டல் KYC செய்து முடித்து விட்டால் லோன்கள் வாங்குவது அல்லது டாப் அப் செய்வது போன்றவை எளிமையாகிவிடும். ஏற்கனவே உங்களுடைய தகவல்களை கடன் வழங்குனர்கள் சரி பார்த்து இருப்பார்கள் என்பதால் மீண்டும் மீண்டும் நீங்கள் அதே மாதிரியான செயல்முறையை செய்ய தேவையில்லை. இதன் மூலமாக உங்களுடைய நேரம் மிச்சமாகி, கடனும் உடனடியாக அங்கீகரிக்கப்படும்.
July 31, 2025 7:29 PM IST