தாத்தாவின் சொத்துகள் சில நேரங்களில், குறிப்பிட்ட சொத்தின் பரம்பரை உரிமை, தாத்தாவுடன் முடிவடைந்துவிட்டால், அது அவரது தனிப்பட்ட சொத்தாகிவிடவும் வாய்ப்புள்ளது. ஆனால், தாத்தா தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சொத்துகளை வாங்கியிருந்தால், அந்தச் சொத்துகளை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தரலாம். ஒருவேளை அந்த நபர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அவரது உடனடி சட்ட வாரிசுகளான மனைவி, மகள், மகன் ஆகியோர், அவரது சுய சம்பாத்திய சொத்துகளுக்கு உரிமை கோர முடியுமே தவிர, பேரனுக்குப் பங்கு கிடைக்காது. ஒருவேளை தாத்தாவின் மகனோ அல்லது மகளோ, அவர் இறப்பதற்கு முன்பே இறந்துவிட்டால், மூத்த மகன் அல்லது மகளுக்குக் கிடைக்கும் பங்கு இறந்தவரின் சட்ட வாரிசுகளான மகன் அல்லது மகளுக்குக் கிடைக்கலாம்.