சிங்கப்பூரில் 11 வயது சிறுமியிடம் அத்துமீறிய இந்தியர் நாட்டவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
58 வயதான ராமலிங்கம் செல்வசேகரன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, உயர் நீதிமன்றம் அவருக்கு 14 ஆண்டுகள், மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத்தண்டனையை நேற்று (ஜூலை 30) விதித்தது.
இந்தியர் நாட்டவருக்கு சிறை
அவர் 50 வயதை தாண்டியவர் என்பதால், சிங்கப்பூர் சட்டத்தின்படி அவருக்கு பிரம்படி விதிக்க முடியாது.
எனவே, 15 பிரம்படிகளுக்குப் பதிலாக கூடுதல் சிறைத்தண்டனையும் அவற்றில் அடங்கும்.
நடந்தது என்ன?
இந்த சம்பவம் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 28, அன்று நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
அந்த சிறுமி மேற்சொன்ன நாளில் ராமலிங்கத்தின் கடைக்குச் சென்றுள்ளார், அப்போது சிறுமிக்கு அவர் குளிர்பானம் இலவசமாக கொடுத்துள்ளார்.
பின்னர் மீண்டும் அதே நாளில் சிறுமி அந்த கடைக்கு ஐஸ்கிரீம் வாங்க சென்றுள்ளார்.
அப்போது, சிறுமியை தனது கடையின் உள் எல்லைக்கு அழைத்துச் சென்று, தொட்டு தகாத செயலை செய்ய வற்புறுத்தியதாகவும் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவ்வழியாக சென்ற வழிப்போக்கரிடம் சிறுமி உதவி கேட்க, அவர் காவல்துறையை அழைத்தார்.
சாட்சியம் உண்மை இல்லை என ராமலிங்கம் வாதம்
விசாரணையின் முடிவில், சிறுமியின் சாட்சியம் உண்மை இல்லை என்று ராமலிங்கம் வாதிட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்திற்குப் பிறகு சிறுமி வீட்டிற்குத் திரும்பும் காட்சிகள் போலீஸ் கேமராவில் இல்லை என்பது சந்தேகத்திற்குரியது என்று அவர் வாதிட்டார்.
தனது பிணை நிபந்தனைகளை மாற்றக் கோரிய ராமலிங்கத்தின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.
தாமொரு நிரபராதி என்றும் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.