Last Updated:
UAN | மாதம் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் பிடிக்கப்படும். இந்த பணத்தை எடுப்பதற்கு நமக்கு UAN எண் தேவைப்படும். அந்த எண்ணை ஈஸியாக ஆன்லைனில் எப்படி எடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மாதமும் எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்டிற்கு உங்களுடைய சம்பளத்தை பங்களித்து வருகிறீர்களா? அப்படி என்றால், நிச்சயமாக உங்களிடம் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் என்று அழைக்கப்படும் UAN இருக்கும்.
உங்களுடைய அனைத்து PF அக்கவுண்டுகளையும் ஒருங்கிணைப்பதற்கான ஒரு தனித்துவமான அடையாள எண் அதுவாகும். எனினும் நீங்கள் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாற்றலாகிப் போகும்போது உங்களுடைய UAN என்ன ஆகும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். முந்தைய நிறுவனம் பங்களித்த PF பணம் தொலைந்து விடுமோ என்ற அச்சமும் இருக்கலாம். ஆனால் பதட்டப்படாதீர்கள். உங்களுடைய UAN -ஐ பெறுவது நீங்கள் நினைப்பதை விட மிகவும் எளிமையானது. ஒரு சில நிமிடங்களிலேயே இன்டர்நெட்டில் அதனை எளிமையாக செய்துவிடலாம். அதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.
படி 1: EPFO வெப்சைட்டுக்கு செல்லவும்
படி 2: உங்களுடைய விவரங்களை நிரப்பவும்
இந்த படிவத்தில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் மற்றும் உங்களுடைய ஆதார் அல்லது PAM போன்ற விவரங்களை என்டர் செய்யுங்கள். உங்களுடைய PF அக்கவுண்டோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை வழங்க வேண்டும். அதில் ஒன் டைம் பாஸ்வேர்டை பெறுவீர்கள்.
படி 3: OTP சரிபார்ப்பு
விவரங்களை நிரப்பி படிவத்தை சமர்ப்பித்த பிறகு உங்களுடைய மொபைல் நம்பருக்கு OTP அனுப்பி வைக்கப்படும். அதனை வெப்சைட்டில் என்டர் செய்துவிட்டு மீண்டும் சமர்ப்பிக்கவும். EPFO தகவல்களுடன் நீங்கள் வழங்கிய தகவல்கள் ஒத்துப் போகும் பட்சத்தில் உங்களுடைய UAN ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். மேலும் அது உங்களுடைய போனுக்கு SMS மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும்.
படி 4: பாதுகாப்பாக சேமித்து வைக்கவும்
உங்களுடைய UAN -ஐ பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் அதனை ஆக்டிவேட் செய்வதும் சிறந்தது. அதனை ‘ஆக்டிவேட் UAN’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலமாக நீங்கள் செய்யலாம். ஆக்டிவேட் செய்த பிறகு பாஸ்வேர்ட் ஒன்றை அமைத்து லாகின் செய்து, உங்களுடைய UAN பயன்படுத்தி உங்களது PF அக்கவுண்டை எளிமையாக நிர்வகிக்கலாம்.
UAN-ன் அவசியம் என்ன?
UAN இல்லாமல் உங்களுடைய PF பேலன்ஸை சரி பார்க்க முடியாது, பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்வது இயலாதது அல்லது பணத்தை வித்ட்ரா செய்யவும் முடியாது. எனவே உங்களுடைய PF அக்கவுண்டிற்கு UAN ஒரு மாஸ்டர் கீ போல செயல்படுகிறது. அது மட்டுமில்லாமல் UAN இருந்தால் உங்களுடைய பங்களிப்புகளை தொடர்ந்து கண்காணிக்கலாம்.
தொடர்பு விவரங்களை அப்டேட் செய்து கொள்ளவும்:
உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடி போன்றவற்றை EPFO டேட்டா பேஸில் பதிவு செய்து கொள்ளுங்கள். இதன் மூலமாக ஒருவேளை உங்களுடைய லாகின் விவரங்களை மறந்தாலோ அல்லது பாஸ்வேர்ட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டாலோ அதனை நீங்கள் எளிமையாக செய்யலாம். ஒருவேளை உங்களுடைய மொபைல் நம்பரில் OTP -ஐ பெறாவிட்டாலோ அல்லது நீங்கள் வழங்கிய விபரங்கள் EPFO வெப்சைட்டில் உள்ள விவரங்களோடு ஒத்துப் போகாவிட்டாலோ பதட்டமடைய வேண்டாம். உடனடியாக உங்களுடைய பே ரோல் அல்லது HR பிரிவை அணுகவும். அவர்களுடைய ரெக்கார்டுகளில் இருந்து உங்களுடைய UAN -ஐ எளிமையாக எடுக்கலாம் அல்லது உள்ளூரில் உள்ள EPFO அலுவலகத்திற்கு சென்று உதவியை பெறுங்கள்.
July 31, 2025 9:06 AM IST