இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.