Last Updated:
5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.
இந்திய அணிக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 4 போட்டிகள் முடிந்துள்ளன. 2 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.
டிராவில் முடிந்தால் அல்லது இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அந்த அணி தொடரைக் கைப்பற்றி விடும். இத்தகைய சூழலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் 5- ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பந்துவீச்சாளர்களான ஆர்ச்சர், ப்ரைடன், லியாம் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக அட்கின்சன், டோங் மற்றும் ஓவர்ட்டன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.
July 30, 2025 8:25 PM IST