மலாக்கா,
மலாக்கா சாலை போக்குவரத்துத் துறை (JPJ) கடந்த ஜூலை 1 முதல் நேற்று வரை, எக்ஸ்பிரஸ் மற்றும் சுற்றுலா பேருந்துகளில் சீட் பெல்ட் அணியாமல் இருந்தவர்கள் மீது 153 சம்மன்களை விதித்துள்ளது.
இது குறித்து பத்து பெரண்டாம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கைக்குப் பிறகு பேசிய துறை இயக்குநர் சிதி சாரினா முகமட் யூசொப், 135 பயணிகள் மற்றும் 18 பேருந்து ஓட்டுநர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினார்.
சம்பவ இடத்தில், உரிய உரிமம் இல்லாமல் மோட்டோசைக்கிள் ஓட்டிய 33 வயது இளைஞருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மொத்தம் 745 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதில், 197 விதிமீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
JPJ, பேருந்து நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நோக்கில் அறிவுறுத்தல் நோட்டீஸ்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வழங்கியதாகவும் தெரிவித்தார்.