குவாந்தான்:
பகாங் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் கெத்தும் நீர் கடத்தலுக்கு பாதுகாப்பளிக்க சுமார் RM110,000 லஞ்சமாக பெற்றதாகும் புகாரின் பேரில், ஓய்வுபெற்ற ஒரு உயர் போலீஸ் அதிகாரி உட்பட மூன்று பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்து, 7 நாட்கள் காவலில் வைத்துள்ளது.
தெமர்லோ நீதிமன்ற மாஜிஸ்திரேட் டான் சியூ கிங், MACC முன்வைத்த விண்ணப்பத்தை ஏற்று, அவர்களை ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மூவர், 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள், வாக்குமூலம் அளிக்க கடந்த இரவு 8.30 மணியளவில் தெமர்லோ MACC அலுவலகத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
தொடக்க விசாரணையில் நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், 2022 முதல் 2024 வரை தனிப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் மாதம் RM4,000 முதல் RM5,000 வரை லஞ்சம் பெற்றதாகவும், பிற சந்தேகநபர்களுடன் அந்த தொகையை பகிர்ந்துகொண்டதாகவும் நம்பப்படுகிறது.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஒரு சந்தேகநபர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து பேசிய பஹாங் MACC இயக்குநர் முகமது சுக்கோர் மாமட், இந்த வழக்கை MACC சட்டம் 2009ன் 16(a)(B) பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.