பினாங்கு விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற நடவடிக்கையில், கவுண்டர் அமைக்கும் முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு குடிநுழைவு அதிகாரிகளைப் பினாங்கு எம்ஏசிசி தடுத்து வைத்தது.
விமான நிலையத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் (லஞ்சம் வாங்குதல்) ஆகியவற்றைக் கண்டறிந்த உளவுத்துறையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எம். ஏ. சி. சி தெரிவித்துள்ளது.
‘கவுண்டர் செட்டிங்’ என்பது வெளிநாட்டினரை மலேசியாவிற்குள் அனுமதிக்கும் ஒரு செயல்முறையாகும், இதில் குடிநுழைவு அதிகாரிகள் முறையான ஆவணங்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட குடிநுழைவு சோதனையின்றி, திட்டமிடப்பட்ட பாதைகளில் அவர்களின் நுழைவை வேண்டுமென்றே அனுமதிப்பதன் மூலம் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்,” என்று எம்ஏசிசி அறிக்கை இன்று தெரிவித்துள்ளது.
MACC சட்டம் 2009 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக இரண்டு அதிகாரிகளும் தடுத்து வைக்கப்பட்டதாக MACC தெரிவித்துள்ளது.
நெட்வொர்க் மற்றும் செயல்பாட்டு முறையை முழுமையாக அடையாளம் காண மேலும் விசாரணைகள் நடந்து வருவதாகவும் அது கூறியது.
ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக, குறிப்பாகத் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சம்பந்தப்பட்ட அமலாக்கத் துறையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று MACC வலியுறுத்தியது.