Last Updated:
குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு கோரிக்கை.
ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு முறையிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தனக்குரிய சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை விடுத்திருந்தார். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரின் கேள்விகள் ஏற்புடையதல்ல என்று மனுவில் கேரளா அரசு குறிப்பிட்டுள்ளது.
July 28, 2025 10:04 PM IST
”குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும்” – உச்ச நீதிமன்றத்திற்கு கேரளா அரசு மனு