கோலாலம்பூர்,
பிரபல மோட்டார் வலைப்பதிவாளர் தெங்கு நிசாருடின் தெங்கு ஸைனுடின் (38) மற்றும் அவரது தம்பி தெங்கு அப்துல் அசீஸ் (30) ஆகியோர் மீது மூவார் மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜூலை 25 அன்று விதித்த ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் RM1,500 அபராதத் தீர்ப்புக்கு எதிராக தலைமை வழக்கறிஞர் மன்றம் (Attorney-General’s Chambers – AGC) இன்று மேன்முறையீடு செய்துள்ளது.
குற்றவாளிகள் இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிராக மேன்முறையீடு செய்யப்பட்டதாகவும், இந்தத் தீர்ப்பை நன்கு பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது AGC அறிக்கை வெளியிட்டுள்ளது. .
தெங்கு அப்துல் அசீஸ்: குற்றவியல் சட்டம் 182 பிரிவின் கீழ் பொது சேவையாளர் ஒருவருக்கு தவறான தகவல் வழங்கியதற்காக குற்றம் ஒப்புக்கொண்டார். தெங்கு நிசாருடின் (இஜா என அழைக்கப்படுகிறார்): குற்றவியல் சட்டத்தின் 109 மற்றும் 182 பிரிவுகளின் கீழ் தவறான தகவல் வழங்குவதைத் தூண்டியதற்காக குற்றம் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றம் ஜூலை 25ஆம் தேதி, இருவருக்கும்: ஒரு மாத சிறைத் தண்டனை, RM1,500 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறை) என்ற வகையில் தண்டனை வழங்கியது.
தற்போது AGC இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனைகள் குறைவாக உள்ளன என்று கருதி மேன்முறையீடு செய்துள்ளது.