Last Updated:
டென்வர் விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் தீப்பிடித்ததால், 179 பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில், விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியுடன் வெளியேறினர்.
டென்வரில் இருந்து மியாமிக்கு, 173 பயணிகள் உட்பட 179 பேருடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக பயணிகள் விமானம் புறப்படுவதற்கு தயாரானது. ஓடுபாதையில் சென்றபோது விமானத்தின் டயரில் திடீரென தீப்பிடித்து புகை வெளியேறியது.
இதனால் புறப்பாடு நிறுத்தப்பட்டு அவசரக் கதவுகளை திறந்து பயணிகள் பாதுகாப்பாக கீழே சறுக்கி இறக்கப்பட்டனர். சில பயணிகள் தங்களது குழந்தைகளை அணைத்தவாறு சறுக்கி தப்பினர். எனினும், ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், விமானத்தின் டயர் வெடித்து சஸ்பென்ஷனை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, மார்ச் மாதத்தில் டென்வர் விமான நிலையத்தில் விமானத்தின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் இதேபோன்று பயணிகள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
July 27, 2025 8:06 PM IST
புறப்படும் நேரத்தில் விமானத்தில் திடீர் தீ விபத்து : டென்வர் விமான நிலையத்தில் பரபரப்பு