Last Updated:
வாடகைக்கு குடியிருக்கும் பலர் பழைய 5 சதவீத தொகையை தவறுதலாக செலுத்தி வருகின்றனர். இது பல்வேறு விதமான குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
நீங்கள் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக வீட்டு வாடகை கொடுத்து வருகிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அக்டோபர் 1, 2024 முதல் இது மாதிரியான வாடகை பேமென்ட்களுக்கான TDS என்பது 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், வாடகைக்கு குடியிருக்கும் பலர் பழைய 5 சதவீத தொகையை தவறுதலாக செலுத்தி வருகின்றனர். இது பல்வேறு விதமான குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, இது மாதிரியான பிழைகளை தவிர்ப்பதற்கு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் முதலில் இருந்து வீட்டு உரிமையாளர்கள் வாடகை தொகையில் 2 சதவீத TDS மட்டுமே பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். எனினும், வாடகைக்கு குடியிருப்பவர் தவறுதலாக 5 சதவீதத்தை பிடித்தம் செய்யும் பட்சத்தில், வாடகைக்கு குடியிருப்பவர்கள் இந்த கூடுதல் தொகையை வருமான வரி துறையினரிடம் இருந்து ஒரு ரீஃபண்டாக பெறலாம் அல்லது வீட்டு உரிமையாளரிடம் இந்த கூடுதல் தொகையை அட்ஜஸ்ட் செய்யும்படி கேட்டுப் பார்க்கலாம்.
கூடுதலான TDS டிடக்ஷன்களுக்கான ரீஃபண்ட் கிளைம் செய்வது குறித்து புரிந்து கொள்வதற்கு வரி செலுத்துவோர் வருமான வரித்துறையின் TRACES வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். அதில் ரீஃபண்ட் செயல்முறை பற்றிய படிப்படியான வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை பார்த்தபடி கூடுதல் டிடக்ஷன்கள் சம்பந்தமான உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்.
பிடித்தம் செய்யப்பட்ட கூடுதல் TDS தொகையை ரீஃபண்ட்டாக பெறுவது எப்படி?
படிப்படியான வழிகாட்டுதல்:
- முதலில் TRACES வெப்சைட்டுக்கு லாகின் செய்து, ‘ஸ்டேட்மென்ட் பேமென்ட்’ டேபின் கீழ் காணப்படும் ‘ரெக்வெஸ்ட் ஃபார் ரீஃபண்ட்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- ரீஃபண்ட் சரிபார்ப்பு பட்டியலை ஒரு முறை பார்த்துவிட்டு ‘ப்ரொசீட்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்வரும் பிரிவு குறியீடுகளில் உங்களுக்கான ஒன்றை தேர்வு செய்யுங்கள்:
- Refund request for Challan u/s 195
- Refund request for Challan other than sec.195
- நீங்கள் ரீஃபண்ட் பெறுவதற்கான சரியான காரணத்தை தேர்வு செய்யவும். அடுத்தபடியாக ‘ஆட் சலான்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- சலான் விவரங்களை நிரப்பி, இது மேல்முறையீட்டு ஆணை சம்பந்தப்பட்டதா அல்லது விவாத் சே விஸ்வாஸ் திட்டம் தொடர்புடையதா என்பதை தேர்வு செய்யுங்கள். அதன்பிறகு குறிப்பு எண்ணை என்டர் செய்யவும்.
- ரீஃபண்ட் தொகையை பெறுவதற்கான உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கவும்.
- சரிபார்ப்பு பக்கத்தில் ‘ப்ரொசீட்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- உறுதி செய்யும் பக்கத்தில் ‘சப்மிட் ரீஃபண்ட் ரெக்வஸ்ட்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது உங்களுடைய டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிஃபிகேட்டை தேர்வு செய்துவிட்டு, உங்களது கோரிக்கையை உறுதிப்படுத்தவும்.
- 14 நாட்களுக்குள் மதிப்பீட்டு அதிகாரிக்கு படிவம் 26B-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
- ‘டிராக் ரீஃபண்ட் ரெக்வெஸ்ட்’ என்பதில் உங்களுடைய கோரிக்கையின் நிலை என்ன என்பதை நீங்கள் கண்காணிக்கலாம்.
- ரீஃபண்ட் நிலையை பார்ப்பதற்கு ஆப்ஷன் 1 அல்லது ஆப்ஷன் 2 ஆகிய இரண்டுக்கு இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
July 27, 2025 11:21 AM IST
வீட்டு வாடகையில் 2%க்கு பதிலாக 5% TDS பிடித்தம் செய்துவிட்டார்களா…? ரீஃபண்ட் தொகையை பெற என்ன செய்யலாம்…?