சீனாவின் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது “சிஸ்டர் ஹாங்’ விவகாரம். இந்த விவகாரம் வெளியானதிலிருந்து விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
சிஸ்டர் ஹாங் எனும் பெயரில் இருக்கும் ஒருவர் டேட்டிங் செயலிகள் மூலம் பல ஆண்களைச் சந்தித்து பாலியல் உறவில் இருந்திருக்கிறார். அதை அவர்களின் அனுமதி இல்லாமல் படம் பிடித்து சில சமூக ஊடகங்களுக்கு விற்றிருக்கிறார். அந்த வீடியோக்களில் சில, சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. அதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சிஸ்டர் ஹாங்-கை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தது.