கோலாலம்பூர்,
வரவிருக்கும் “விசிட் மலேசியா 2026” சுற்றுலாப் பணிக்கான முன்னேற்பாடுகளாக, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு அடிப்படை மொழி மற்றும் நற்பண்புத் தொடர்பான பயிற்சியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் லோக் தெரிவித்தார்.
“டாக்சி துறையினர் வெறும் போக்குவரத்திற்காக மட்டுமல்ல, மலேசியாவின் பொது சேவையின் இதயமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் முதற்காட்சியாகவும் அமைகின்றனர்,” என அவர் கூறினார்.
அதே நேரத்தில், டாக்சி ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ (Perkeso) உள்கட்டுமான பங்களிப்பு ஊக்கத்தொகை 10 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் லோக் தெரிவித்தார்.
“இந்த மறுசீரமைப்புகள் தொடர்ந்து நடை பெறுகின்றன, மேலும் மக்களுக்கான பலனுக்காக பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்த இந்த துறையினருடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றுவேன்,” என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மலேசியா டாக்சி , வாடகை வாகனம், லிமோசியன் மற்றும் விமானநிலைய டாக்சி சங்கம் (GTSM) நடத்திய மூன்றாவது ஆண்டு பொதுக்கூட்டத்தை லோக் இன்று திறந்து வைத்தார். இதன்போது, அந்தந்த துறையினரின் பார்வைகள், கருத்துகளை நேரடியாக கேட்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.