Last Updated:
தாய்லாந்து – கம்போடியா மோதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தாய்லாந்து – கம்போடியா மோதலை நிறுத்துவதற்கு தான் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் எல்லைப் பிரச்சனை, தற்போது ராணுவ மோதலாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இருதரப்பிலும் பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இரு நாட்டு எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, கம்போடியாவின் பத்காவோ (Battkhao ) பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. சண்டை நிறுத்தத்திற்கு உடனடியாக வரும்படி கம்போடியா விடுத்த அழைப்பை தாய்லாந்து ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து – கம்போடியா மோதலை நிறுத்துவதற்கு தான் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வர்த்தக ஒப்பந்தத்தை வைத்து இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதை போன்று தற்போது தாய்லாந்து – கம்போடியா போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
July 27, 2025 10:47 AM IST
“தாய்லாந்து – கம்போடியா மோதலை நிறுத்துவதற்கு சமரச பேச்சுவார்த்தை..” அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்!