Last Updated:
ஆஸ்ட்ரோனோமர் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளித்த க்வினெத் பேல்ட்ரோ, ஆன்டி பைரனின் சர்ச்சை தொடர்பாக கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இசை நிகழ்ச்சி ஒன்றில் தற்செயலாக எடுக்கப்பட்ட வீடியோவால் கடந்த ஒருவாரமாக சர்ச்சையில் சிக்கிய ஆஸ்ட்ரோனோமர் நிறுவனம், தனது தற்காலிக செய்தித் தொடர்பாளராக அயன் மேன் பட நாயகி க்வினெத் பேல்ட்ரோவை (Gwyneth Paltrow) நியமித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஆஸ்ட்ரோனோமர் என்ற டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ஆன்டி பைரன். இவர் அமெரிக்காவில் நடந்த ’கோல்ட் பிளே’ என்ற இசைக் கச்சேரியில் பங்கேற்றபோது, தனது நிறுவனத்தின் பெண் HR உடன் நெருக்கமாக இருந்தது அங்கே இருந்த பெரிய திரை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சர்ச்சைகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து, ஆன்டி பைரன் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ஆஸ்ட்ரோனோமர் நிறுவனத்தின் தற்காலிக செய்தித் தொடர்பாளராக அயன் மேன் படத்தின் நாயகியும், கோல்ட்பிளே என்ற கச்சேரி நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான கிறிஸ் மார்ட்டினின் முன்னாள் மனைவியுமான க்வினெத் பேல்ட்ரோ நியமிக்கப்பட்டுள்ளார்.
July 27, 2025 7:30 AM IST
கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சி வீடியோவால் எழுந்த சர்ச்சை.. ஆஸ்ட்ரோனோமர் நிறுவனத்திற்கு தற்காலிக செய்தித் தொடர்பாளர் நியமனம்!