இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் அரசு வழங்கிய பழைய காகித ஆதார் கார்டுகளையே வைத்திருக்கிறார்கள். எளிதாக வளைந்துவிடக்கூடிய மற்றும் தண்ணீரில் கிழிந்துவிடக்கூடிய மற்றும் பாக்கெட்டில் வைப்பதற்கு ஏதுவாக இல்லாத இந்த ஆதார் அட்டையை தூக்கிச் செல்வது என்பது பலருக்கும் கஷ்டமான விஷயமாக இருக்கலாம். எனவே, அதற்கு மாற்றாக, பிவிசி ஆதார் கார்டுகள் மாற்றுத் தேர்வாக மாறி வருகின்றன.
எனவே, தற்போதைய காகித ஆதார் அட்டையை தூக்கி எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக, பாதுகாப்பான மற்றும் நீடித்த தீர்வாக இருக்கும் பிவிசி ஆதார் அட்டையைப் பெற்றுக் கொள்வது மிகவும் வசதியானதாக இருக்கும். ஏனெனில், இது ஒரு டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் போலவே பிளாஸ்டிக் வடிவில் உங்களின் ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
பிவிசி ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இதில் கீழ்க்காணும் பல பாதுகாப்பு அம்சங்கள் அடங்கும்:
- ஹாலோகிராம்
- மைக்ரோ டெக்ஸ்ட்
- ஃகோஸ்ட் இமேஜ் (ghost image)
- வெளியீட்டு தேதி
- டிஜிட்டல் கையொப்பம் செய்யப்பட்ட QR குறியீடு
இவை அனைத்தும் சேர்ந்து, இந்த அட்டையை காகித மற்றும் மின்-ஆதார் பதிப்புகளைவிட வலிமையானதாகவும், எளிதாக வைத்திருக்கக் கூடியதாகவும் மாற்றுகின்றன.
1. முதலில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
2. உங்கள் ஆதார் எண் / பதிவு ஐடி / மெய்நிகர் ஐடி இதில் ஏதாவது ஒன்றை உள்ளிடவும்
3. ரூ.50 கட்டணமாக செலுத்தவும்
4. மேற்படிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட பிறகு, ஆதார் அச்சிடப்பட்டு உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு 10 முதல் 15 வேலை நாட்களில் ஸ்பீட்போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மின்-ஆதார் மற்றும் காகித ஆதார் கார்டுகளைப் போலவே பிவிசி ஆதார் அட்டையும் சர்வதேச ரீதியாக செல்லுபடியாகும். இது வெறும் வடிவ மாற்றம் மட்டுமே, மற்ற உள்ளடக்கம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் என அனைத்திலும் இது ஒரே மாதிரியாகவே இருக்கும். எந்த வடிவத்திலான ஆதார் கார்டும், அடையாளச் சான்றாக அல்லது முகவரிச் சான்றாக இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால் பெற முடியுமா?
- உங்களது ஆதார் எண்ணுடன் உங்களின் மொபைல் எண் இணைக்கப்படாமல் இருந்தாலும், பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
- முதலில் “Non-registered mobile number” எனும் விருப்பத்தை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் OTP அடிப்படையிலான அங்கீகார செயல்முறையைப் பின்பற்றலாம்.
- எனினும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தரவு தளத்தில் உங்களது மொபைல் எண்ணை இணைப்பது, பிற ஆதார் சேவைகளையும் முழுமையாகப் பெற உதவும்.
பிவிசி ஆதார் அட்டையை ஆர்டர் செய்த பிறகு, UIDAI வழங்கும் டிராக்கிங் ஐடி-யை பயன்படுத்தி இந்தியா போஸ்ட் இணையதளத்தில் உங்கள் அட்டையின் டெலிவரி நிலையை தெரிந்து கொள்ளலாம். எனினும், ஆர்டர் செய்வதற்கு முன்பாக உங்களது தற்போதைய முகவரியை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில், இது டெலிவரி தோல்விகளை தவிர்க்க உதவும்.
உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது பிற தகவல்களில் மாற்றம் செய்திருந்தால், அந்த மாற்றங்கள் UIDAI தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்பட்டவுடன், புதிய பிசி ஆதார் அட்டைக்காக மறுபதிப்பை கோரலாம். இதன் மூலம், உங்கள் ஆதார் அட்டை எப்போதும் சமீபத்திய மற்றும் சரியான தகவல்களுடன் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.
குறிப்பு: பிவிசி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது என்பது தனிப்பட்ட விருப்பம்தான், கட்டாயமல்ல. ஆனால், நீடித்த பயன்பாடு மற்றும் பாதுகாப்புக்கு, இது ஒரு சிறந்த விருப்பம் ஆகும்.
July 26, 2025 7:04 PM IST