நான்கு மாணவர்களை சுட்டுக் கொன்ற மாணவரின் பெற்றோருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது…
2021-ல் ஈதன் க்ரம்ப்ளே என்ற 15 வயது மாணவன் ஆக்ஸ்ஃபோர்டு உயர்நிலைப் பள்ளியில் தன்னோடு படிக்கும் சக மாணவர்கள் 4 பேரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் இன்றளவும் பலராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்கள் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் மற்றும் அவரின் பெற்றோர்கள் ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று, இறந்த மாணவர்களின் பெற்றோர்கள், தங்களின் உணர்வுபூர்வ அறிக்கைகளை கலிஃபோர்னியா ஓக்லாண்ட் நீதிமன்றத்தில் அளித்தனர்.
ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே தன் மகனின் மோசமான மனநிலையை கவனிக்கத் தவறியதாகவும், மேலும் 2021 தாக்குதலில் அவர் பயன்படுத்திய துப்பாக்கியை பெற்றோர்கள் வாங்கியதாகவும், அதோடு அந்தத் துப்பாக்கியை சரியாகப் பதுக்கி வைக்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டினர்.
குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறுவனுக்கு பரோல் இல்லா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மகனின் மனநிலையை கவனிக்கத் தவறிய அலட்சிய போக்கிற்காக பெற்றோர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.