Last Updated:
Jagdeep Dhankhar | ஜெகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்தார். குடியரசு துணைத் தலைவர் மாளிகை சீலிடப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் குடியரசு துணைத் தலைவரின் மாளிகை சீலிடப்பட்டு, ஜெகதீப் தன்கர் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தார். ஆனால், அவரது பதவி விலகலுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என தகவல் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நாடாளுமன்ற விடுதி வளாகம் அருகே தேவாலய சாலையில் உள்ள குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில் இருந்து அவரை உடனடியாக காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
It is being widely claimed on social media that Vice President’s official residence has been sealed and former VP has been asked to vacate his residence immediately #PIBFactCheck
❌ These claims are #Fake.
✅ Don’t fall for misinformation. Always verify news from official… pic.twitter.com/3jIDDaiu7A
— PIB Fact Check (@PIBFactCheck) July 23, 2025
இதனை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்புக் குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அதன் எக்ஸ் தள பக்கத்தில் துணை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் துணை ஜனாதிபதி உடனடியாக தனது இல்லத்தை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரவலாகக் கூறப்பட்டு வருகிறது. இந்தக் தகவல்கள் உண்மையல்ல என தெரிவித்துள்ளது.
Delhi,Delhi,Delhi
July 24, 2025 9:40 AM IST
துணை ஜனாதிபதி இல்லத்திலிருந்து ஜெகதீப் தன்கர் உடனடியாக வெளியேற்றப்பட்டாரா? – மத்திய அரசு விளக்கம்!