பெண்ணின் வாழ்க்கையை நாசப் படுத்திய இரு வெளிநாட்டவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் அறையில் வைத்து பெண்ணை நாசம் செய்ததாக அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
வேலையிட காயம்… ஊழியர் நாடகமாடியதாக கூறிய முதலாளி மரணம் – களமிறங்கிய MOM & போலீஸ்
இரு வெளிநாட்டவர்கள்
50 வயதான முதல் ஆடவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் சக ஊழியர் ஆவார். அவர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
51 வயதுமிக்க இரண்டாவது ஆடவர், முதல் குற்றவாளியுடன் சுமார் 20 ஆண்டுகளாக நண்பர், இவர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
வெளிநாட்டவர்களான அவர்களின் பெயர்கள், எங்கு வேலைபார்க்கிறார்கள், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற எந்த தகவலையும் நீதிமன்றம் வெளியிடவில்லை.
ஊழியர்களுடன் உரையாடல்
2023ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று, பெண் வேலை செய்யும் துறையில் அவர்கள் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் என்பதால் அவர்களுடன் அந்த பெண் உரையாடினார். இந்த உரையாடல் ஹோட்டலில் நடந்தது.
ஊழியர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கும் மது கொடுத்துள்ளனர், இதனை அடுத்து அவர்களின் பேச்சில் தவறு இருப்பதை அந்த பெண் உணர்ந்தார்.
இது பெண்ணுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக அவர் விவரித்தார். பின்னர் மது கடுமையானதால் அந்தப் பெண் சுய நினைவை இழந்தார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய 3 அம்சங்கள் – மனிதவள துணை அமைச்சர் அறிவிப்பு
பெண்ணால் எதும் செய்ய முடியவில்லை
பின்னர் “வேண்டாம், வேண்டாம், வேண்டாம்” என்று பலமுறை சொன்னதை அந்த பெண் நினைவு கூர்ந்தார், ஆனால் அவரால் அசையவோ அல்லது கண்களைத் திறக்கவோ முடியவில்லை.
தனது உள்ளாடைகளில் இர*தக் கறைகளைக் கண்ட பெண், தான் நாசம் செய்யப்பட்டதாக சந்தேகித்தார். பின்னர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.
இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
தடயவியல் சான்றுகள்
அந்த பெண்ணுக்கு உடன்பாடு இல்லை என்பதை நன்கு அறிந்தும் இரண்டு பேரும் சீண்டியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணையில் வாதிட்டார்.
துணி இல்லாமல் இருந்தபோது, பெண்ணுக்கு தெரியாமலே ஆடவர்களின் ஒருவர் புகைப்படத்தை எடுத்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தடயவியல் சான்றுகள் பாதிக்கப்பட்ட பெண் கூறியதுக்கு ஏற்றார் போல அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒர்க் பெர்மிட் அனுமதியுடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை ஏன் ?