சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் வேலையிட காயம் தொடர்பாக போலியான இழப்பீடு கோரிக்கையை முன் வைத்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) விசாரித்து வருகிறது.
இந்த போலியான இழப்பீடு கோரிக்கை குறித்து பேஸ்புக் கணக்கில் பதிவுகளை வெளியிட்ட இரு நாள்களில், சுமோ சாலட் (Sumo Salad) நிறுவனத்தின் உரிமையாளர் காலமானார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய 3 அம்சங்கள் – மனிதவள துணை அமைச்சர் அறிவிப்பு
வேலையிட காயம் தொடர்பாக போலியான இழப்பீடு கோரிக்கை
அந்த பதிவில், அவரது முன்னாள் ஊழியர் ஒருவர் போலியான வேலையிட காயம் தொடர்பில் இழப்பீடு கோரிக்கையை முன்வைத்ததாகக் குற்றம் சாட்டினார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான மரணித்த ஜேன் லீ என்ற அந்த உரிமையாளர் பதிவில் (ஜூலை 18) கூறியதாவது; முன்னாள் ஊழியர் ஒருவர் போலியான வேலையிட காயம் தொடர்பில் இழப்பீடு கோருவதற்காக பொய் திட்டம் தீட்டியிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இது அந்த ஊழியரின் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் முடியும் தருவாயில் இந்த நாடகம் நடந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சட்ட அமைப்பின் உதவியுடன், முன்பே இந்த தந்திர வேலையை ஊழியர் முயற்சித்ததாகவும் லீ கூறியிருந்தார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆலோசனை
வேலையிட காயங்களுக்கு இழப்பீடு பெறுவது எப்படி என்பது குறித்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்த அமைப்பு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று, ஊழியர் கூடுதல் நேரம் செலவிட்டு அன்றாடப் பணிகளை சிரமமின்றி நடந்தே செய்வதை தான் கவனித்ததாகவும், ஆனால் மருத்துவர்களைச் சந்தித்தபோது அவர் நாடகமாடியதாகவும் லீ குறிப்பிட்டார்.
தன்னிடம் அவர் குறித்த வீடியோ காட்சிகள் இருப்பதாகவும் லீ பதிவில் கூறினார்.
மேலும், அவதானிப்புகள் மற்றும் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், இது கவனமாக திட்டமிடப்பட்ட நாடகம் என நம்புவதாக அவர் சொன்னார்.
அவர் வெளியிட்ட 2 பதிவுகளை தொடர்ந்து அவர் கடந்த சனிக்கிழமை மரணித்ததாக சொல்லப்படுகிறது.
விசாரணை
லீயின் மறைவைத் தொடர்ந்து, அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த MOM, இந்த சம்பவம் தொடர்பாக லீயுடன் தொடர்பு கொண்டதாகவும் தனது பேஸ்புக்கில் பதிவில் விளக்கியுள்ளது.
மனிதவள அமைச்சகம் மற்றும் காவல்துறை இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
ஊழியர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவை தெரிவித்தன.
சிங்கப்பூரில் வேலை… போலியான சான்றிதழ்கள் சமர்ப்பித்து சிக்கிய இரு வெளிநாட்டவர்கள்