Last Updated:
இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
போலி தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடி கணக்கெடுப்புக்காக ஒரு வீட்டிற்குச் சென்றனர். புகைப்படத்திற்காக அந்தப் பெண்ணின் தங்கச் சங்கிலியை கழற்றச் சொன்னார்கள். பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணின் தங்கச் சங்கிலியை திருடி, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தின் மதுரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட நேருவா கிராமத்தில் நடந்துள்ளது.
இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், பீகாரில், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற போர்வையில், திருடர்கள் தேர்தல் அதிகாரிகள் போல் நடித்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் சரண் மாவட்டத்தில், ஸ்பெஷல் இன்டென்சிவ் ரிவிஷன் (SIR) பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் போல் நடித்த இரண்டு பேர், வயதான தம்பதியினரின் வீட்டிற்குள் நுழைந்து அவர்களின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி முகேஷ் குமார் கூறியதாவது, தேர்தல் ஊழியர்கள் போல் வேடமிட்டு இரண்டு பேர், நேருவா கிராமத்தில் உள்ள ஒரு வயதான தம்பதியினரின் வீட்டிற்குச் சென்றனர். அவர்களின் விவரங்களைக் கேட்ட பிறகு, புகைப்படத்திற்காக வயதான பெண்மணியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழற்றச் சொன்னதாகவும், அதன் பிறகு, அவரது ஆதார் அட்டையைக் காட்டச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் கணவர் வேறொரு அறையில் இருந்ததாகவும் முகேஷ் குமார் தெரிவித்தார். போலி தேர்தல் அதிகாரிகள் தனது மனைவியை புகைப்படம் எடுக்க வேண்டும் என சொன்னதைக் கேட்டதும், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் பிறகு, அவர் தனது மனைவி இருக்கும் அறைக்குச் சென்றார். அப்போது மெத்தையின் கீழ் வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனதையும், தேர்தல் அதிகாரிகள் போல் காட்டிக் கொண்டு வந்த இரண்டு நபர்களும் தப்பி ஓடியதையும் கண்டார் என்றும் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மூதாட்டியின் கணவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். தகவலை அடுத்து போலீசார் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை சோதனை செய்து பார்த்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முறையான புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்று அதிகாரி முகேஷ் குமார் தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
July 15, 2025 5:35 PM IST
தேர்தல் அதிகாரிகள் எனக்கூறி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்… என்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!