வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் வகையில் மனிதவள அமைச்சகத்தின் (MOM) முக்கிய 3 அம்சங்கள் குறித்து மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு கூறினார்.
செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் நேற்று (ஜூலை 20) நடைபெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கான இன நல்லிணக்க தின கொண்டாட்டத்தில் உரை நிகழ்த்திய அமைச்சர் முக்கிய முன்னெடுப்புகளை அறிவித்தார். அவை குறித்து இந்த பதிவில் காண்போம்.
ஒர்க் பெர்மிட் அனுமதியுடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை ஏன் ?
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் முதல் அம்சம்
ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ் (HIA) என்ற இலாப நோக்கற்ற அமைப்புடனான உறவை அமைச்சகம் வலுப்படுத்தும் என்று கூறினார்.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,000 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் 1,000 உள்ளூர்வாசிகள் தங்களின் கலாச்சாரங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இரு சமூகத்தின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நீடித்த தொடர்புகளை உருவாக்கவும் இதனால் வாய்ப்புகளை உருவாகும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
DBS/POSB வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்ஸ், தள்ளுபடி, கேஷ்பேக்: எப்படி பெறுவது?
இரண்டாவது அம்சம்
கணினி, ஆங்கிலம் மற்றும் நிதியறிவு போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ளவும் செய்முறை பயிற்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார்.
இதன் மூலம் 1,500 வெளிநாட்டு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மூன்றாவது அம்சம்
வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு, “Care Sisters” திட்டத்திற்கான ஆதரவை MOM மேலும் வலுப்படுத்தும் என்று திரு. தினேஷ் கூறினார்.
மோசடியில் இருந்து பாதுகாத்து கொள்வது, உலவியல், மனநல ஆதரவுகள் போன்றவை அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர்களில் 1,500 பேருக்கு அந்த ஆதரவு பயிற்சிகள் அளிக்கப்படும் என MOM இலக்கு வைத்துள்ளது.
சுமார் 1,000 வெளிநாட்டு ஊழியர்களும், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூகக் குழுக்களைச் சேர்ந்த 200 உள்ளூர் பங்கேற்பாளர்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அங்கு விளையாட்டுகள், நிகழ்ச்சிகள் மற்றும் சமயங்களுக்கு இடையேயான உரையாடல் அமர்வு ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன.