Last Updated:
என்டர்டெயின்மென்ட் அல்லது பொழுதுபோக்கு கிரெடிட் கார்டுகள் என்பது பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட பேமெண்ட்களை செய்யும்போது ரிவார்டுகள், டிஸ்கவுண்ட் அல்லது கேஷ்பேக் போன்றவற்றை வழங்குகிறது.
இன்று பொழுதுபோக்கு என்பது பலருக்கு வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பார்ப்பதாக இருக்கட்டும், புதிதாக வெளியான வெப்சீரிஸை நெட்பிளிக்ஸில் ரசித்துப் பார்ப்பதோ அல்லது ஏதாவது ஒரு நிகழ்வுக்கு செல்வது போன்ற ஒவ்வொருவருடைய விருப்பத்தைப் பொறுத்து இந்த பொழுதுபோக்கானது மாறுபடும்.
எனினும், பொழுதுபோக்குக்கான செலவு என்பது குறிப்பிடத்தக்க வகையில் அமைகிறது மற்றும் புத்திசாலித்தனமாக இந்த செலவுகளை நிர்வகிப்பது மிகவும் அவசியம். இந்த இடத்தில் நமக்கு கிரெடிட் கார்டுகள் உதவியாக அமைகின்றன. பொழுதுபோக்குக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சில கார்டுகள் ரிவார்டுகள் மற்றும் மேலும் சில கேஷ்பேக் பலன்களை வழங்குகின்றன. எனவே, என்டர்டெயின்மென்ட் கிரெடிட் கார்டுகள் என்றால் என்ன?, யாருக்கு இந்த கிரெடிட் கார்டு உதவியாக இருக்கும்? என்பது போன்ற தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
என்டர்டெயின்மென்ட் அல்லது பொழுதுபோக்கு கிரெடிட் கார்டுகள் என்பது பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட பேமெண்ட்களை செய்யும்போது ரிவார்டுகள், டிஸ்கவுண்ட் அல்லது கேஷ்பேக் போன்றவற்றை வழங்குகிறது. வழக்கமான கிரெடிட் கார்டு போல இல்லாமல் இந்த கிரெடிட் கார்டுகள் குறிப்பாக பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகபட்ச பலன்களை அளிக்கிறது.
என்டர்டெயின்மென்ட் கிரெடிட் கார்டு யாருக்கானது?
ஒவ்வொரு வார இறுதி நாளிலும் நிச்சயமாக ஏதாவது ஒரு திரைப்படத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பவர்களுக்கு இது ஏற்றது. மேலும், BookMyShow போன்ற பிளாட்ஃபார்ம்களில் அடிக்கடி மூவி டிக்கெட்டுகளை புக்கிங் செய்பவர்களுக்கு இந்த எண்டர்டெயின்மென்ட் கிரெடிட் கார்டு என்பது டிஸ்கவுண்டுகளை வழங்குகிறது.
பல்வேறு OTT பிளாட்ஃபார்ம்களுக்கு நீங்கள் சப்ஸ்கிரிப்ஷன் பெறுபவர்கள் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி அதற்கான பேமெண்டை செலுத்தும்போது, உங்களுக்கு கேஷ்பேக் அல்லது ரிவார்டுகள் வழங்கப்படும். பல கிரெடிட் கார்டுகள் OTT சப்ஸ்கிரிப்ஷன்களுக்காகவே சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன.
அடிக்கடி லைவ் கான்சர்ட் அல்லது தியேட்டர் பெர்ஃபார்மன்ஸ் போன்றவற்றிற்கு செல்லும் நபர்களுக்கு இந்த என்டர்டெயின்மென்ட் கிரெடிட் கார்டு ஏற்றது. இது மாதிரியான நிகழ்வுகளுக்கு டிக்கெட் வாங்கும்போது இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்துவதன் மூலமாக கூடுதல் டிஸ்கவுண்டுகளைப் பெறலாம்.
என்டர்டைன்மென்ட் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
- என்டர்டைன்மென்ட் கிரெடிட் கார்டுகள் வழக்கமாக ஆண்டுவாரியான கட்டணத்தை வசூலிக்கும். இது 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். எனினும், கார்டு வழங்கும் பலனைவிட இந்த கட்டணம் என்பது அதிகமாக இருக்கக்கூடாது.
- பொழுதுபோக்குக்காக குறிப்பிட்டு நீங்கள் செய்யும் செலவுகளுக்கு மட்டுமே இந்த கார்டுகள் ஏற்றது. எப்போதாவது திரைப்படங்களுக்கு செல்வது அல்லது ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது போன்ற பழக்கம் கொண்டவர்களுக்கு வழக்கமான கிரெடிட் கார்டு போதுமானது.
- ஒரு சில கார்டுகள் BookMyShow அல்லது PVR போன்ற குறிப்பிட்ட பார்ட்னர்களுடன் இணைந்து சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. எனவே, உங்களுக்கு விருப்பமான பிளாட்ஃபார்ம்களில் பேமெண்ட் செய்யும்போது ரிவார்டுகளைப் பெறுவதற்கு இந்த மாதிரியான ஆஃபர்களை வழங்கும் கார்டை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.
July 17, 2025 5:27 PM IST
பொழுதுபோக்கிற்காகவே வடிவமைக்கப்பட்ட என்டர்டெயின்மென்ட் கிரெடிட் கார்டுகள்… உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமான்னு பாருங்க…!