Last Updated:
வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு வேலி மீது மர்மப் பொருள் வீசப்பட்டதால், அதன் முன்பகுதி மூடப்பட்டது.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு வேலி மீது மர்மப் பொருள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, அதன் முன்பகுதி சிறிது நேரம் மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும், அலுவலகமாகவும் செயல்படுவது வெள்ளை மாளிகை. அங்கிருந்து பென்சில்வேனியாவுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அதிபர் டிரம்ப் நேற்று புறப்படவிருந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் முன்பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலி மீது திடீரென மர்மப்பொருள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மூடப்பட்டு, அங்கிருந்த செய்தியாளர்கள் அனைவரும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அரை மணி நேரத்துக்குப் பிறகு, வெள்ளை மாளிகையின் முன்பகுதி திறக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் யாரோ ஒரு மர்ம நபர் தனது செல்போனை அங்கு வீசியதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் குறிப்பிட்டார். இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த ஆண்டில் தேர்தல் பரப்புரையின்போது, டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவருக்கு காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இது நடைபெற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில், மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
July 16, 2025 2:32 PM IST
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது வீசப்பட்ட மர்மப் பொருள்.. மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலா?