Last Updated:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் ஏற்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது கிரிக்கெட் லெஜெண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது மேட்ச்சில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் சமநிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 82 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்துள்ளது.
தொடக்க வீரராக களம் இறங்கிய கே.எல். ராகுல் 177 பந்துகளில் 100 எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 112 பந்துகளில் 2 சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
2 சிக்சர்கள் அடித்ததன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரிச்சர்ட்ஸ் 34 சிக்சர் அடித்திருந்தார்.
அந்த சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான தனது 15 ஆவது டெஸ்ட் போட்டியிலேயே அடித்து சாதனை படைத்துள்ளார் ரிஷப் பந்த். 59 ஆவது ஓவரை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வீசியபோது அதனை பந்த் சிக்சருக்கு அடித்து விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்திருந்தார்.
July 12, 2025 8:32 PM IST