Last Updated:
இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
இரும்பு, அலுமினியம் மீதான கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இருநாட்டு அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருநாடுகளிடையே மினி வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் முழு அளவிலான ஒப்பந்தம், கூடுதல் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு செப்டபம்பர் அல்லது அக்டோபரில் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இரும்பு, அலுமினியம் மீதான கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்திற்கான வரியை 25 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தி அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
இதற்கு பதிலடியாக குறிப்பிட்ட அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிக்க உள்ளதாக உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் இறக்குமதி பாதிக்கும் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
July 11, 2025 7:42 AM IST