லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் 35-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக், 17-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கேத்ரினா அலெக்ஸாட்ரோவாவுடன் மோதினார்.
இதில் பெலின்டா பென்சிக் 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 24-ம் நிலை வீரரான இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலி 6-4, 6-4, 6-7(4–7), 7-6(7-3) என்ற செட் கணக்கில் 83-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.