ஜோதிட சாஸ்த்திரத்தின்படி சில உயிரினங்கள் நன்மையும், சிலவற்றை காண்பதால் தீய அறிகுறிகள் ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
வீட்டில் அடிக்கடி எறும்பு வந்தால் அதற்கான காரணம் தெரிந்துவிட்டு விரட்டுவதா இல்லையா என்பதை சரியாக யோசித்து செய்யுங்கள்.
வீட்டில் எறும்புகள் தோன்றுவது சாதாரணமானதுதான், ஆனால் அதன் பின்னால் சில மறைந்த நம்பிக்கைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இது நல்லதும், கெட்டதுமான பல அறிகுறிகளை சுட்டிக்காட்டுகிறது.
சிவப்பு எறும்புகள்
எறும்புகள் சில நேரங்களில் சுவர்களிலும், சில நேரங்களில் தரையிலும் ஊர்ந்து செல்லும் காட்சிகள் எங்களை அசௌகரியப்படுத்தலாம்.
இதனால், பலரும் அவற்றை விரட்ட வீட்டு வைத்தியம் அல்லது இயற்கை முறைகள் பயன்படுத்துவார்கள். ஆனால், வீட்டில் எறும்புகள் இருப்பது வெறும் தொல்லை மட்டுமல்ல இது நல்லதையும், கெட்டதையும் குறிக்கும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
வீட்டில் அதிகமாக சிவப்பு எறும்புகள் தோன்றினால், அது செலவுகள் அதிகரிக்க, கடன் தேவைப்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. இது உங்கள் நிதி நிலையை பாதிக்கும் சின்னம் எனக் கருதப்படுகிறது.
கருப்பு எறும்புகள்
கருப்பு எறும்புகள் தோன்றுதல், உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள், வளர்ச்சி வாய்ப்புகள் வரப்போகின்றன என்பதைக் குறிக்கும்.
மகிழ்ச்சி, செழிப்பு, சமூக மரியாதை அதிகரிக்கும். கருப்பு எறும்புகளை விரட்டாமல், மாவு கொடுத்தால், அவை தானாக விலகும் என நம்பப்படுகிறது.
பண வரவுக்கான சின்னங்கள்
அரிசியில் கருப்பு எறும்புகள் தோன்றினால், பண வரவு, பதவி உயர்வு, வணிக வாய்ப்பு ஏற்படும். தங்கத்தில் இருந்து எறும்புகள் வெளிவருவது, செல்வம் விரைவில் பெருகும் எனக் கருதப்படுகிறது.
இந்த நம்பிக்கைகள் பழைய பாரம்பரியங்களிலும் வாஸ்து நம்பிக்கைகளிலும் அடிபடையுடன் கூறப்பட்டவை.
எறும்புகளின் இயக்கத்தையும், வரையறைகளையும் கவனித்தால், வாழ்க்கையின் சில மாற்றங்களை முன்கூட்டியே உணர முடியும் என்பதே இந்த பதிவின் விளக்கம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |