பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உற்சாக வரவேற்பு தந்தார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸின் 17 ஆவது உச்சி மாநாடு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை கைகுலுக்கி ஆரத்தழுவி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வரவேற்றார்.
பின்னர், பிரதமர் மோடி உள்பட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 20 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட உலகளாவிய அமைப்புகளால், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மோதல்கள், தொற்றுநோய்கள், பொருளாதார நெருக்கடிகள், சைபர் கிரைம் சவால்கள் என எதுவாக இருந்தாலும், உலகலாளவிய அமைப்புகளிடம் எந்த தீர்வும் இல்லை என்றும் பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் ஐ.நா பாதுகாப்பு சபை வெளியிட்ட சர்வதேச அமைப்புகளில் காலத்திற்கேற்ற வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
July 07, 2025 11:25 AM IST
BRICS Summit: சர்வதேச அமைப்புகளில் காலத்திற்கேற்ற சீர்திருத்தங்கள் தேவை : பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்