*இதற்கு முதலில் நீங்கள் இன்கம் டேக்ஸ் துறையின் வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.
*ஹோம் பேஜின் மேல் வலது மூலையில் உள்ள ‘Login Here’ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
*இப்போது உங்களுடைய யூசர் IDயை என்டர் செய்து ‘Continue’ என்பதை கிளிக் செய்யவும்.
*நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் உங்களுடைய யூசர் ஐடி என்பது உங்களது PAN அல்லது ஆதார் எண்ணாக இருக்கும் (ஒருவேளை அவற்றை நீங்கள் இணைத்திருந்தால்).
*மற்றவர்களுக்கு யூசர் ID என்பது PAN.
*அடுத்ததாக லாகின் பக்கத்தில் உள்ள ‘Forgot password’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*இப்போது மீண்டும் உங்களுடைய யூசர் IDயை கிளிக் செய்து, ‘Continue’ என்பதைத் தட்டுங்கள்.
*எப்படி உங்களுடைய பாஸ்வேர்டை ரீசெட் செய்ய வேண்டும் என்ற ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
*பின்வரும் ஆப்ஷன்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்:-
-ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரில் OTP பெறலாம். -டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிஃபிகேட்டை அப்லோட் செய்யலாம்.
-இ-ஃபைலிங் OTP பயன்படுத்தலாம். முதல் ஆப்ஷன்: ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரில் கிடைத்த OTP-யை பயன்படுத்துதல்
*’Generate OTP’ என்பதை கிளிக் செய்து பின்னர் ‘Continue’ என்பதை தட்டுங்கள்.
*ஏற்கனவே உங்களிடம் OTP இருக்கிறது என்றால் ‘I already have OTP’ என்பதை தேர்வு செய்து, அதனை என்டர் செய்யவும்.
*ஒப்புதல் பெட்டியை டிக் செய்து விட்டு, ‘Generate Aadhaar OTP’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*இப்போது உங்களுடைய மொபைல் நம்பரில் பெறப்பட்ட 6 இலக்க OTP-ஐ என்டர் செய்து, ‘Verify’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*புதிய பாஸ்வேர்டை அமைத்து அதனை உறுதி செய்யவும். அடுத்து ‘Submit’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*இப்போது உங்களுடைய பாஸ்வேர்ட் ரீசெட் செய்யப்பட்டு விட்டது.
* ‘Upload Digital Signature Certificate’ என்பதை தேர்வு செய்து ‘Continue’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*தேவைக்கேற்ப ‘New DSC’ அல்லது ‘Registered DSC’ என்பதை தேர்வு செய்து ‘Continue’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*தேவைப்பட்டால் emSigner ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
*உங்களுடைய சர்டிஃபிகேட்டை தேர்வு செய்து விட்டு, வழங்குநர் பாஸ்வேர்டை என்டர் செய்யவும்.
*’Sign’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*உங்களுடைய புதிய பாஸ்வேர்டை அமைத்து உறுதி செய்யவும்.
*பிறகு ‘Submit’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*இப்போது உங்களுடைய பாஸ்வேர்ட் ரீசெட் செய்யப்பட்டது.
மூன்றாவது ஆப்ஷன்: இ-ஃபைலிங் OTP பயன்படுத்துதல்
*’Use e-filing OTP’ என்பதை தேர்வு செய்து ‘Continue’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*உங்களுடைய பிறந்த தேதியை என்டர் செய்து, ‘Continue’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் இமெயிலுக்கு OTP பெறுவீர்கள்.
*இரண்டு OTP-களையும் என்டர் செய்துவிட்டு ‘Verify’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*புதிய பாஸ்வேர்டை அமைத்து அதனை உறுதி செய்யவும்.
*பின்னர் ‘Submit’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
*இப்போது உங்களுடைய பாஸ்வேர்ட் ரீசெட் செய்யப்பட்டு விட்டது.
இன்கம் டேக்ஸ் லாகின் பாஸ்வேர்டை மாற்றியமைப்பது என்பது மிகவும் விரைவான மற்றும் எளிமையான விஷயம். இனி உங்களுடைய போர்ட்டலில் லாகின் செய்து, வருமான வரியை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் தாக்கல் செய்யலாம்.
July 07, 2025 12:43 PM IST
இன்கம்டேக்ஸ் லாகின் விவரங்கள் மறந்து போனா கூட பிராப்ளம் இல்ல… இப்படி பண்ணா அத ஈசியா மாத்திக்கலாம்!