சட்டவிரோதமான முறையில் உணவு விநியோக ஓட்டுநர்களாக வெளிநாட்டு ஊழியர்கள் வேலைபார்ப்பதாக உள்ளூர் ஓட்டுனர்கள் குறை கூறுகின்றனர்.
இதனால் வருமானம் குறைந்து, விரக்தி மற்றும் உதவியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக உணவு விநியோக ஓட்டுனர்கள் கூறுகின்றனர்.
இரு வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடுதியில் ச#ண்டை: ஊழியருக்கு சிறை – என்ன நடந்தது?
வெளிநாட்டு ஓட்டுனர்களை கவனித்து வந்த உள்ளூர் ஓட்டுநர்
உணவு விநியோக ஓட்டுநர்களாக சட்டவிரோதமாக வேலை செய்யும் வெளிநாட்டு ஓட்டுனர்களை சிறிது காலமாக தாம் கவனித்து வருவதாக உள்ளூர் ஓட்டுநர் ஆல்வின் லிம் என்ற ஊழியர் கூறியுள்ளார்.
இதுபோன்று தினமும் ஐந்து முதல் ஆறு ஓட்டுனர்களை செராங்கூன் நெக்ஸில் மட்டும் பார்த்ததாக லிம் கூறினார்.
அவர்கள் அனைவரும் மின்-பைக்குகளை ஓட்டி சென்றதாகவும் லிம் குறிப்பிட்டுள்ளார்.
சிராங்கூனைச் சேர்ந்த மற்றொரு ஓட்டுநர், சட்டவிரோத வெளிநாட்டு ஓட்டுனர்களின் ஒருவரைப் பற்றி காவல்துறைக்கு புகார் கொடுத்தார்.
20 வெளிநாட்டு ஊழியர்கள் ஒரே இடத்தில்.. “உள்வாடகை விட கூடாது” என சொன்ன சக ஊழியருக்கு வெட்*டு
புகார்
மேலும் உள்ளூர் ஓட்டுனர்கள் சேர்ந்து இது குறித்த அனைத்து தகவல்களையும் மனிதவள அமைச்சகத்திடமும் (MOM) சமர்ப்பித்ததாக அவர் கூறினார். அவர்கள் மாணவர் அனுமதி பாஸ்களில் இங்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
காவல்துறையிடம் புகார் கொடுத்த பிறகும், வெளிநாட்டினர் தொடர்ந்து வேலை செய்து வந்ததாக லிம் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக முகங்களை மறைத்துக்கொண்டு, நெக்ஸுக்குச் செல்வதைத் தவிர்த்தும் வந்ததாக திரு லிம் கூறினார்.
இருப்பினும், அவர்கள் சமீபத்திய வாரங்களில் மீண்டும் அந்தப் பகுதியைச் சுற்றி காணப்பட்டதாக அவர் கூறினார்.
வருமானம் இழப்பு
இந்த சட்டவிரோத ஓட்டுநர்களால் உணவு விநியோக ஓட்டுனர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரக்தி அடைந்துள்ளதாகவும் அவர் CNA விடம் சொன்னார்.
இதனால் வருமானம் குறைந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலையில் அதிகமான போட்டி நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முத்தரப்பு பணிக்குழு
இந்தப் பிரச்சினையை கண்காணித்து தீர்க்க முத்தரப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அன்று கூறியது.
Grab, MOM மற்றும் போக்குவரத்து அமைச்சகம் (MOT) ஆகியவை NTUC மற்றும் அதன் இணைப்பு அமைப்புகளுடன் சேர்ந்து இந்த பணிக்குழுவில் பணியாற்றும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிமக்கள் / நிரந்தரவாசிகளுக்கு (PR) மட்டுமே அனுமதி
சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகள் (PR) மட்டுமே Grab, Deliveroo மற்றும் foodpanda போன்ற நிறுவனங்களில் விநியோக ஓட்டுநர்களாகப் பணியாற்ற அனுமதி உண்டு.
வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்புடைய செய்திகள்…
வெளிநாட்டு ஊழியர்களை கூடுதலாக வேலைக்கு எடுக்க அனுமதி – ஓட்டுனர்கள் பெரும் மகிழ்ச்சி
சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர்… சில மணிநேரத்திலேயே ப*லியான சோகச் சம்பவம்!