சிலேத்தர் வெஸ்ட் லிங்கில் வேன் மற்றும் டிப்பர் லாரி மோதியதில் வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று (ஜூலை 6) காலை 10:05 மணியளவில், யுஷுன் அவென்யூ 1க்கு அருகிலுள்ள சிலேத்தர் வெஸ்ட் லிங்கில் நடந்த இந்த விபத்து குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள், ஊழியர்களிடையே மர்ம காய்ச்சல் – மீண்டும் வெப்பநிலை சோதனையா?
இந்த விபத்தில், 35 வயது வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவ குழு உறுதி செய்து அறிவித்ததாக SPF செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

சிலேத்தர் ஏரோஸ்பேஸ் டிரைவ் திரும்பும் வழிக்கு அருகே இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது.
இது தொடர்பான புகைப்படத்தில் விபத்து நடந்த இடத்திற்கு முன்னால் பல டிப்பர் லாரிகள் நிற்பதை காண முடிகிறது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (வீடியோ) – 31 வயது ஓட்டுநர் விசாரணையில்…