டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் கர்ப்ப காலத்தில் காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு கர்ப்பிணிகளின் பிரசவ விளைவுகளை எவ்வாறு பாதித்தது என்பதை பகுப்பாய்வு செய்ய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 மற்றும் remote sensing தரவுகளை ஆய்வு செய்தனர்.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் PM2.5-க்கு அதிகமாக வெளிப்படுவது குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்கான 40 சதவீத வாய்ப்புகளுடனும், குறைப்பிரசவத்திற்கான 70 சதவீத வாய்ப்புகளுடனும் தொடர்புடையது என்பதை இந்த குழு கண்டறிந்தது. தவிர மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை போன்ற கிளைமேட் கண்டிஷன்களும் கூட இதுபோன்ற பாதகமான பிறப்பு விளைவுகளுடன் அதிக தொடர்பு கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
PLoS குளோபல் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவின் வடக்கு மாவட்டங்களில் வசிக்கும் குழந்தைகள் சுற்றுப்புற காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 2.5 மைக்ரான் விட்டத்திற்கும் குறைவான அளவுள்ள, நுண்ணிய துகள் பொருள் 2.5 (PM2.5) மிகவும் தீங்கு விளைவிக்கும் காற்று மாசுபடுத்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில் அதிக அளவு PM2.5 மாசுபாடுகள் இருப்பதையும், நாட்டின் தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் குறைந்த அளவு இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் 39 சதவீதம், உத்தராகண்ட்டில் 27 சதவீதம், ராஜஸ்தானில் 18 சதவீதம் மற்றும் டெல்லியில் 17 சதவீதம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குறைப்பிரசவங்கள் அதிகமாக பதிவாகி உள்ளன. அதே நேரம் மிசோரம், மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இது குறைவாகவே காணப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் (22%) அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகள் உள்ளன.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு மற்றும் ராஸ்டர் படங்களின் தரவைப் பயன்படுத்தி, இந்த ஆய்வு பல்வேறு புள்ளிவிவர பகுப்பாய்வுகளையும் இடம் சார்ந்த மாதிரிகளையும் பயன்படுத்தியது. இது காற்று மாசுபாடு மற்றும் பிறப்பு விளைவுகளுக்கு இடையேயான தொடர்பை தெளிவுப்படுத்துகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். “தோராயமாக 13% குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்ததாகவும், 17% குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்ததாகவும் கண்டறிந்தனர்.”
மேலும், PM2.5 வெளிப்பாட்டில் ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராம் அதிகரிப்பு என்பது குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 5 சதவீதமும், குறைப்பிரசவத்துடன் 12% அதிகரிப்புடன் தொடர்புடையது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது. அதேபோல தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5க்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் 18 சதவீதம் பேர் பிறக்கும்போது குறைந்த எடையுடன் இருந்ததாக ஆய்வுக் குழு கூறியது.
2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், PM லெவலை நிவர்த்தி செய்வதன் மூலம் இந்தியாவில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெப்ப செயல் திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மை போன்ற உத்திகளை பொது சுகாதாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களிடையே காற்று மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குழு தெரிவித்துள்ளது.
July 06, 2025 4:05 PM IST
இந்தியாவில் 13% குழந்தைகள் குறை பிரசவத்திலும், 17% குழந்தைகள் குறைந்த எடையுடனும் பிறக்கின்றனர் – அறிக்கை கூறுவது என்ன…?