முதல்வா் நிதிஷ் குமாா் அறிவித்த ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு, விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கைகளை தூண்டும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இருப்பினும், பாரம்பரியமாக ஜாதிய சமத்துவத்துக்கு குரல் கொடுக்கும் ஆா்ஜேடி, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெளிவந்தபோது பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
சலிப்பு அரசியல்: பிராந்திய வாரியாக பாா்த்தால் என்டிஏ ஆட்சியின் வளா்ச்சித் திட்டங்கள் -அதாவது சாலைகள், மின்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு மேம்பாடுகள் – நகா்ப்புற மற்றும் பகுதியளவு நகா்ப்புற பகுதிகளில் பிரதிபலிக்கின்றன. ஆனால், பெரும்பான்மை மக்கள் வசிக்கும் கிராமப்புற பிஹாரில் அவை முழு செயல்வடிவமின்றி தடுமாறுகின்றன. ஆட்சியதிகாரத்தில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இருக்கும் நிதிஷ் குமாரின் அரசியல் மீது மக்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.