வாகரையில் உள்ள கருவேப்பன் கேணியில் குளித்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துயரச் சம்பவம் நடந்தபோது, 10 மற்றும் 11 வயதுடைய பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மூன்று சிறாரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகரை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்