Last Updated:
ஏற்கனவே அவர் பிரபலம் அடைந்து விட்டார். இதனால் அவர் மீதான கவனம் அதிகம் காணப்படும்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி விளையாடி வருகிறார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் சதம் அடித்து இளம் வயதில் ஐபிஎல் தொடரில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான பேட்டிங்கால் ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை இவர் பெற்றிருக்கிறார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இவரது ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் ஷிகர் தவான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: 14 வயதில் சூர்யவன்ஷி சதம் அடித்திருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவுலர்களுக்கு எதிராக அவர் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது நம்பிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கு ஐபிஎல்-க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அதே நேரம், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவருக்கு எளிதானதாக அமையாது.
ஏற்கனவே அவர் பிரபலம் அடைந்து விட்டார். இதனால் அவர் மீதான கவனம் அதிகம் காணப்படும். அதே நேரம், அவருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.
July 06, 2025 8:39 PM IST