Last Updated:
இந்திய அணி தனது முதல் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று 5-ஆவது நாளாக பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இந்தியா 608 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது.
இதனை அடைய முடியாமல் இங்கிலாந்து அணி தொடர்ந்து திணறி வருகிறது. அந்த அணியின் ஜாக் கிராவ்லி ரன் ஏதும் எடுக்காமலும் பென் டக்கட் 25 ரன்களிலும், ஆலி போப் 24 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 6 ரன்களும், ஹேரி புரூக் 23 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 56 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைக்கு மீதம் சுமார் 38 ஓவர்கள் வரை வீச வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 382 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 2விக்கெட்டுகளை கைப்பற்றினாலே போதும்.
அதுவும் தற்போது விளையாடும் இங்கிலாந்து வீரர்கள் பவுலர்களாக இருப்பதால் இந்த 2 விக்கெட்டுகள் விரைவில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தனது முதல் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
July 06, 2025 8:55 PM IST