கடனை திருப்பிச் செலுத்தும் உங்களுடைய திறனை உறுதி செய்வதற்கு கடன் வழங்குநர்கள் வங்கி ஆவணங்களை சரிபார்ப்பது வழக்கம். ஆனால், ஒருவேளை நீங்கள் ஒரு ஃப்ரீலான்சராகவோ அல்லது சுயதொழில் செய்யும் நபராகவோ அல்லது பேங்க் ஸ்டேட்மென்ட் உங்களிடம் இல்லாவிட்டாலோ பர்சனல் லோன் வாங்குவது உங்களுக்கு சவாலாக அமையலாம். எனவே, பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாமல் பர்சனல் லோன் வாங்குவதற்கான ஒருசில பயனுள்ள வழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நிச்சயமாக முடியும். பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாமலேயே பின்வரும் ஆவணங்களை கொடுத்து உங்களால் பர்சனல் லோன் பெற முடியும்.
இது மாத வருமானம் பெறுபவர்களுக்கு ஏற்றது. சேலரி ஸ்லிப்பை வருமானத்திற்கான சான்றிதழாக கடன் வழங்குநரிடம் கொடுக்கலாம். ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகை வருமானமாக வருகிறது என்பதை இது நிரூபிக்கிறது.
ITR என்பது பேங்க் ஸ்டேட்மென்டிற்கு ஒரு மாற்றீடாக அமைகிறது. உங்களுக்கு தொடர்ச்சியான வருமான மூலம் இருப்பதை உறுதிசெய்ய கடந்த 1 முதல் 2 ஆண்டுகளுக்கான ITRகளை நீங்கள் வழங்க வேண்டும்.
சிபில் அல்லது கிரெடிட் ஸ்கோர் என்பது பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாவிட்டாலும்கூட கடன் பெறுவதற்கான உங்களுடைய வாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது. வழக்கமாக 700க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது கடன் வாழ்க்கையில் உங்களுடைய பொறுப்பை வெளிப்படுத்துகிறது.
பர்சனல் லோன் பெறுவதற்கு அடமானம் தேவை இல்லை என்றாலும்கூட நகை, ப்ராபர்ட்டி அல்லது பிற மதிப்பு மிகுந்த சொத்துக்களை அடமானமாக காட்டுவது கடன் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
இது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தால் உங்களுக்கு வழங்கப்படும் ஒரு சான்றிதழ். உங்களுடைய வருமானத்தில் இருந்து எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டு, அரசுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்பதை இது பிரதிபலிக்கும். ஒரு வருடத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதித்திருக்கிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது. இது மாத வருமானம் பெறுபவர்களுக்கு சிறந்த முறையில் வேலை செய்கிறது.
உங்களிடம் பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாவிட்டாலும், பின்வரும் காரணிகளின் அடிப்படையில் கடன் வழங்குநர்கள் உங்களுக்கு பர்சனல் லோன் வழங்குவார்கள்.
- குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்சமாக 60 வயதாக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்ச வருமான தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். இது நகரம் மற்றும் கடன் வழங்குநரை பொறுத்து மாறுபடும்.
- ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர், வழக்கமாக 700க்கும் அதிகமாக வைத்திருக்க வேண்டும்.
- நீங்கள் மாத வருமானம் பெறக்கூடியவர் என்றால், தற்போதைய பணியில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- சுயதொழில் செய்து வருபவர்கள் தற்போதைய தொழிலை குறைந்தபட்சம் 1 முதல் 2 ஆண்டுகளுக்கு நடத்தியிருக்க வேண்டும்.
எனவே, பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாமல் பர்சனல் லோன் வாங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று கிடையாது. ஆனால், அது சற்று சவாலானது. கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உங்களுடைய திறனை நிரூபிப்பதற்கு வங்கிகள் சரிபார்ப்புச் செயல்முறையில் ஈடுபடும். எனவே சேலரி ஸ்லிப், ITR அல்லது வலிமையான கடன் வரலாறு ஆகியவற்றை வருமான நிரூபணமாகக் காட்டி, நீங்கள் ஒரு பர்சனல் லோனை வாங்கலாம்.
July 06, 2025 3:23 PM IST