சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே மர்ம காய்ச்சல் ஏற்படுவதால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வேதேச விமான நிலையத்தில் நாள் ஒன்று 50,000 மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
சிங்கப்பூரிலிருந்து சென்னை.. பயணியின் உடைமையில் அடையாளமிட்டு அனுப்பிய சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள்
சிங்கப்பூர், UAE நாடுகளுக்கு அதிக அளவில் பயணம்
சர்வதேச விமான சேவையும் உள்ளதால் சிங்கப்பூர், அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிக அளவில் பயணிகள் வந்து செல்வர் என கூறப்பட்டுள்ளது.
அங்கு AAI விமான நிலைய அதிகாரிகள், மாநில காவல்துறை, சுங்கத்துறை, மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல அரசு சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
கொரானா காலத்துக்கு பிறகு சென்னை விமான நிலையம் முகக்கவசம் போன்ற கட்டுப்பாடுகள் இன்றி முழுமையாக செயல்பட்டு வருகிறது.
திடீரென பரவும் மர்ம காய்ச்சல்
இந்த நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு திடீரென காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
முனையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கார்கோ பிரிவை சேர்ந்த ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு திடீரென சளி, இருமல், உடலில் வெப்பநிலை அதிகமாக ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சமீபத்தில் பரவி வரும் கொரானா அல்லது கேரளாவில் பரவிவரும் நிபா தொற்றின் தாக்கமாக இருக்கலாம் என்ற அச்சமும் அவர்களிடையே நிலவி வருகிறது.
“எந்த புகாரையும் பெறவில்லை”
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், காய்ச்சல் தொடர்பாக எந்த புகாரையும் நாங்கள் பெறவில்லை என்றனர்.
புகார்கள் வரும்பட்சத்தில் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
சர்வேதேச முனையங்களில் வந்து செல்வோர் காரணமாக சிலருக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், அறிகுறிகள் இருக்குமேயானால் தாமாக முன்வந்து சோதனை செய்துகொள்ளும்படியும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வெப்பநிலை சோதனை
மேலும், கொரோனா காலத்தில் இருந்த வெப்பநிலை சோதனை தற்போது விமான நிலையத்தில் நடப்பில் இல்லை.
அண்டை மாநிலமான கேரளாவில் நிபா தொற்று பரவி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடிக்கவிட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.