அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான கடும் கருத்து மோதலை அடுத்து எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்
அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சித் தொடங்கப்பட்டுள்ளதை எலோன் மஸ்க் தமது சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார்.
ஜூலை 4 அன்று மஸ்க் தனது ஆதரவாளர்களிடம் புதிய கட்சியை நிறுவலாமா என்று கேட்டு ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்த நிலையில், அதில் 65.4 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்து, புதிய கட்சி தொடர்பில் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
முன்னதாக, ட்ரம்ப ஜனாதிபதியான பின்னர், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகராகவும் அரசாங்க செயல்திறன் துறையை மேற்பார்வையிடுபவராகவும் மஸ்க் நியமிக்கப்பட்டார்.
எனினும், கடந்த சில மாதங்களில் இருவருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
ட்ரம்பின் தேர்தல் பணிக்காக 288 மில்லியன் டொலர் செலவிட்ட எலோன் மஸ்க், இறுதியில் ட்ரம்பை எதிர்க்குத் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.