கால்கரி: கனடாவின் கால்கரி நகரில் கனடா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 6-வது முதலிடத்தில் உள்ள சீன தைபேவின் சவு டியன் சென்னுடன் மோதினார்.
43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 49-ம் நிலை வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.