Last Updated:
BRICS Summit: பிரதமர் நரேந்திர மோடி, 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரியோ டி ஜெனிரோ சென்றுள்ளார். அர்ஜென்டினாவில் எரிசக்தி, கனிமம், மருந்து துறைகளில் ஒத்துழைப்பை விவாதித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டு அதிபர் ஜேவியர் மிலேயுடன் எரிசக்தி, கனிமத் துறை மற்றும் மருந்துத் துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து பிரதமர் விவாதித்தார்.
முன்னதாக, பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Desembarcou no Rio de Janeiro, Brasil, onde participarei da Cúpula dos BRICS e depois irei à sua capital, Brasília, para uma visita de Estado a convite do presidente Lula. Esperando uma rodada produtiva de reuniões e interações durante esta visita.@LulaOficial pic.twitter.com/SGZzU4uNQX
— Narendra Modi (@narendramodi) July 5, 2025
அர்ஜெண்டினா பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் அங்கிருந்து பிரேசிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
July 06, 2025 6:55 AM IST