ஸ்பெயினில் இருந்து உருகுவே சென்ற விமானத்தில், நடுவானில் ஏற்பட்ட கடுமையான குலுக்கலால், ஒரு பயணி பெட்டிகள் வைக்கும் இடத்திற்குள் விழுந்தார்.
அதிர்ஷ்டவசமாக, மற்ற பயணிகள் அவரை பத்திரமாக மீட்டனர். அந்த சம்பவத்தில் மொத்தம் 30 பயணிகள் காயமடைந்தனர்.
விபத்து நடந்த விமானம், ஏர் யூரோப்பா நிறுவனத்திற்கு சொந்தமானது. ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் இருந்து உருகுவேவின் மோன்ட்விடியோ நகருக்கு சென்று கொண்டிருந்தபோது, பிரேசில் வான் பகுதியில் விமானம் திடீரென குலுங்கியது.
குலுக்கலின்போது, சீட் பெல்ட் அணியாத பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். ஒரு பயணி பெட்டிகள் வைக்கும் இடத்திற்குள் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக, சக பயணிகள் அவரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 30 பயணிகள் காயமடைந்தனர். (a)