Last Updated:
Thackeray brothers | மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து தாய் மொழிக்காக ஓரணியில் கைகோர்த்தனர்.
சிவசேனா நிறுவனரான பால் தாக்கரேவின் சகோதரர் மகனான ராஜ் தாக்கரே, கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2005ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா என்ற கட்சியைத் தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார். பால் தாக்கரே மறைவிற்குப் பிறகு சிவசேனா கட்சியை அவரது மகன் உத்தவ் தாக்கரே வழி நடத்தி வந்தார். இரு தரப்பினர் இடையே 20 ஆண்டுகளாக எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இருவரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதற்கிடையே பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை மாநில அரசு திரும்பப் பெற்றது.
அதைத்தொடர்ந்து, மும்பையில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான வெற்றிப் பேரணி கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் பங்கேற்றனர். இருவரும் கைகோர்த்து கட்டியணைத்து அன்பை பகிர்ந்தனர்.
July 05, 2025 3:11 PM IST
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் தாக்கரே சகோதரர்கள்! – ஒன்றிணைத்த இந்தி எதிர்ப்பு போராட்டம்!